முத்தையாபுரத்தில்பா.ஜ.க. தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்

முத்தையாபுரத்தில் பா.ஜ.க. தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-10-13 18:45 GMT

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தெற்கு மண்டலம் சார்பில் முத்தையாபுரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார் மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், பொதுச்செயலாளர் ராஜா, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி தலைவி செல்வி வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் குலசேகர ரமேஷ், பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, விவசாய அணி மண்டல் தலைவர் முத்துராஜ், தெற்கு மண்டல் துணைத் தலைவர் ஜெயசித்ரா ராமலட்சுமி பொய் சொல்லான் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்