முள்ளக்காடு பகுதியில் பரவலாக மழை
முள்ளக்காடு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதியில் மழை நீர் குளம போல் தேங்கியது. அத்திமரப்பட்டியில் பெய்த மழையினால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை வாழை மற்றும் நெல் நாற்றுக்கு மிகவும் உகந்ததாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.