மேலமங்கலகுறிச்சியில் 5 ஆயிரம் வாழைகள் தீயில் எரிந்து நாசம்
மேலமங்கலகுறிச்சியில் 5 ஆயிரம் வாழைகள் தீயில் எரிந்து நாசமாகின.;
ஏரல்:
ஏரல் அருகே உள்ள மேலமங்கலகுறிச்சி பகுதியில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் வாழைகள் பயிரிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இங்குள்ள ஒரு வாழத்தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த தோட்டங்களிலும் தீ பரவி எரிந்தது. இதை பார்த்த விவசாயிகள் பல மணி நேரம் போராடி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த அந்தோணி, லிங்கம், பிச்சைமணி ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திலிருந்த 5 ஆயிரம் வாழைகள் தீயில் கருகி நாசமாகின. இதனால் இந்த விவசாயிகளுக்கு ரூ.10லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.