பெருந்துறையில் நடை பயிற்சி சென்ற வியாபாரி பலி

வியாபாரி பலி

Update: 2022-09-03 17:09 GMT

பெருந்துறை ராஜ வீதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 47). இவர் வாரச் சந்தை கூடும் இடங்களில் கடை விரித்து பூட்டு வியாபாரம் செய்து வந்தார்.

இவர் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தன்னுடைய வீட்டிலிருந்து நடை பயிற்சிக்காக, பெத்தாம்பாளையம் செல்லும் ரோட்டில் நடந்து சென்றார்.

திருவேங்கிடம்பாளையம்புதூர் பிரிவு அருகே அவர் சென்ற போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அலாவுதீன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை தேடி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த அலாவுதீனுக்கு முபாரக் பேகம் (43) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்