குள்ளஞ்சாவடியில் சாராயம் விற்ற பெண் கைது
குள்ளஞ்சாவடியில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.
கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றி புகார் தெரிவிக்க 7418846100 என்ற எண்ணையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிமுகப்படுத்தினார். இந்த எண்ணில் வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த புகார் எண்ணுக்கு குள்ளஞ்சாவடி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சங்கர் மனைவி நாகம்மாள் என்கிற கண்ணாயிரம் (வயது 60) என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது.
இதையடுத்து குள்ளஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சோதனை செய்தபோது அங்கு அவர் 8 லிட்டர் சாராயத்தை பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து கண்ணாயிரத்தை போலீசார் கைது செய்தனர். 8 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.