கோவில்பட்டியில் த.மா.கா.வினர் நூதன போராட்டம்

கோவில்பட்டியில் த.மா.கா.வினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-13 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர த.மா.கா.வினர் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள ஜெயகணபதி கோவில் முன்பு தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் கே.பி. ராஜகோபால் தலைமை தாங்கினார். இதில் வட்டார தலைவர் ஆழ்வார் சாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர செயலாளர் வின்சென்ட், நகர பொருளாளர் செணபகராஜ், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் மணிமாறன், இளைஞரணி வட்டார தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் அர்ச்சகரிடம் தாம்பூல தட்டில் தேங்காயுடன் வைத்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்