கோவில்பட்டி பள்ளியில்வ.உ.சி. பிறந்தநாள் விழா
கோவில்பட்டி பள்ளியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் நடுநிலை பள்ளியில் வ.உ.சி.பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் இந்தியா வரைபடத்தில், அவரது உருவத்தை பல வண்ணங்களில் வரைந்து அதில் 152 வயதை குறிக்கும் வகையில்
அகல் விளக்குகளை ஏற்றினா். மாணவர்கள் வ.உ.சி. சுதேசி கப்பல் இயக்கியதை நினைவு கூறும் வகையில் காகிதக் கப்பல்களை தண்ணீரில் மிதக்க விட்டனர். பின்னர் சுதேசி பொருட்களை வாங்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றுப் பேசினார். நாடார் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், பள்ளி குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி மற்றும் ஆசிரியர்கள்- மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.