கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில்6,964 மாணவ, மாணவியர் பிளஸ்-2 தேர்வு எழுதினா்
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 6,964 மாணவ, மாணவியர் பிளஸ்-2 தேர்வு எழுதினா்;
கோவில்பட்டி:
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நேற்று 6,964 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்தவர்களில் 340 மாணவ, மாணவியர் தேர்வை எழுதவில்லை.
பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நேற்று தொடங்கி பிளஸ்-2 தேர்வை 6,964 மாணவ, மாணவியர் எழுதினர்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 31 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது.
தேர்வு மையங்களுக்கு நேற்று காலையில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வந்தனர். பெரும்பாலான மாணவ, மாணவியருடன் பெற்றோரும் வந்திருந்தனர். இதில் விண்ணப்பித்திருந்த மாணவர்கள் 3,528 பேரில் 3,266 பேரும், மாணவிகள் 3,856 பேரில் 3,698 பேரும் தேர்வு எழுதினா். இது 94.31சதவீதம் ஆகும்.
340 பேர் தேர்வு எழுதவில்லை
மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 162 மாணவர்களும், 158 மாணவிகளும், ஆக மொத்தமாக 340 மாணவ, மாணவியர் எழுதவில்லை. தேர்வு பணிகளை கண்காணிக்க 52 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் தெரிவித்தார்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முதல் நாள் தமிழ் தேர்வு நடந்தது. இதில் 466 மாணவிகள் தேர்வு எழுதினா். தேர்வு பணிகளை முதன்மை கண்காணிப்பாளர் சீதா மகேஸ்வரி, துறை அலுவலர் பத்மாவதி மேற்பார்வையிட்டனர்.
அதிகாரி ஆய்வு
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 437 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.