கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-12 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லிங்கம்பட்டி சமுதாய நல கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வி. முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர். ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் லிங்கம்பட்டி கிராமத்தில் சிப்காட் கொண்டுவர ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் தி.மு.க. அமோக வெற்றி பெற ஒற்றுமையுடன் உழைப்பது, பூத் கமிட்டி அமைப்பது, விடுபட்ட வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்