குடிமங்கலம்
கோட்டமங்கலத்தில் ரூ. 2 கோடியே 76 லட்சம் செலவில் புதிய மின்மாற்றியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
புதிய மின்மாற்றி
உடுமலை மின் பகிர்மான வட்டம் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் புதிதாக 16 மெகா வாட் திறன் கொண்ட புதியமின் மாற்றி அமைக்கப்பட்டுபணிகள் நிறைவு பெற்றுள்ளன.புதிய மின்மாற்றியால் கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், பொன்னேரி உள்ளிட்ட கிராமங்கள் பயன் பெறுகின்றன. இதனால் 2100 பயனீட்டாளர்கள் பயன்பெறுவார்கள். விழாவிற்கு வருவாய்கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.
தொடங்கி வைத்தார்
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய மின் மாற்றியை தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் மட்டும் 1லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டில் 50 ஆயிரம்விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டு புதிதாக துணை மின் நிலையங்கள் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
.