கொடுமுடி பகுதியில் 30 விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி
கொடுமுடி பகுதியில் 30 விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனா்.
கொடுமுடி
கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 15 சிலைகளும், ஊர் பொதுமக்கள் சார்பில் 15 சிலைகளும் வைக்க கொடுமுடி போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். மேலும் விநாயகர் சிலைகள் அனைத்தும் வருகிற 2-ந் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைப்பதற்கும் போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.