கயத்தாறில்இடி-மின்னலுடன் பலத்த மழை
கயத்தாறில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மரங்கள் வேரோடுசாய்ந்தன.
கயத்தாறு:
கயத்தாறில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து. நேற்று மதியம் முதல் வெயில் குறைந்து 4 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த பெய்த மழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியதால் கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை அருகே உள்ள வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மயிரிழையில் தப்பியது. உடனடியாக கயத்தாறு காவல் போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சுமார் ஒருமணி நேரம் பெய்த இந்த மழையால் வெப்பக்காற்று வீசிய அப்பகுதியில் இதமான சூழல் உருவானது.