காயல்பட்டினத்தில் வினாடி வினா போட்டி பரிசளிப்பு
காயல்பட்டினத்தில் வினாடி வினா போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் நடைபெற்ற மிலாடி நபி விழா வினாடி வினா போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி ஜெய்லானி பள்ளியில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு முஹம்மது தலைமை தாங்கினார். ஜெய்லானி பள்ளி தலைவர் ரஹ்மத்துல்லா மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியோர் முன்னிலை. வகித்தனர். ஜெசிமுதீன் வரவேற்று பேசினார். மன்னர் பாஜூல் அஸ்ஹாப் வாழ்த்துரை வழங்கினார். ஹாஜிமலாங் நன்றி கூறினார். முதல் பரிசை ஜம் ஜம் ஆயிஷாம், இரண்டாவது பரிசை செப்பிது ஹலமாம், 3-வது பரிசை அப்துல் பாசித் ஆகியோர் பெற்றனர்.