காயல்பட்டினத்தில்குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு சாவு

காயல்பட்டினத்தில் குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-12 18:45 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மங்கலவாடி ஜல்லி திரடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 33). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி பொன் இசக்கி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஜெயக்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். மேலும் வீட்டில் மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையால் ஜெயக்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.

இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெயக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

2 முறை தற்கொலை முயற்சி

தகவல் அறிந்து வந்த ஆறுமுகநேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாபுராஜ் மற்றும் போலீசார், ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜெயக்குமார் ஏற்கனவே 2 முறை தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

----------

Tags:    

மேலும் செய்திகள்