காயல்பட்டினத்தில்கஞ்சா விற்றவர் கைது
காயல்பட்டினத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைதுசெய்தனர்.;
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜூடி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த ராமர் மகன் பிரேம்குமார் (வயது 35) என்பதும், அவர் அப்பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.