கடமலைக்குண்டு கிராமத்தில்5 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி கிடக்கும் பஸ் நிலையம்

கடமலைக்குண்டு கிராமத்தில் 5 ஆண்டுகளாக பஸ் நிலையம் பயன்பாடு இன்றி கிடக்கிறது.

Update: 2023-08-22 18:45 GMT

கடமலைக்குண்டு கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் நிலையம் அருகே சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கடைகள் மற்றும் கழிப்பறை வசதியுடன் பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையம் கட்டப்பட்ட சில மாதங்கள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வருவதில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் கடந்த 5 ஆண்டுகளாக பஸ் நிலையம் பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதன் காரணமாக பஸ் நிலையம் லாரி, வேன், ஆட்டோக்களை நிறுத்தி வைக்கும் வாகன நிறுத்தமாக மாறியது. மேலும் பஸ் நிலையம் பயன்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் சாலையோரம் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

தற்போது கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்ற சில வினாடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்