கடமலைக்குண்டு, ஆண்டிப்பட்டி பகுதிகளில்வெப்பத்தை தணித்த கோடை மழை

கடமலைக்குண்டு, ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த கோடை மழை வெப்பத்தை தணித்தது.

Update: 2023-04-21 18:45 GMT

கடமலைக்குண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதேபோல கடும் வெயில் காரணமாக மலைப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் பஞ்சம்தாங்கி, மேகமலை ஆகிய மலைப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது. மேலும் விவசாயமும் பாதிப்படைந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் தேனி பிரதான சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்