தேனியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.;

Update: 2022-07-07 17:27 GMT

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

பருவமழை காலத்தில் பேரிடர் ஏற்பட்டால் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முரளி, பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்