அரசு மேல் நிலைப்பள்ளியில்தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம்
அரசு மேல் நிலைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;
தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுதா தனராணி தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா பிரின்சஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். அதே போன்று போக்சோ, சைபர் கிரைம் குறித்தும் விளக்கி கூறினார். கூட்டத்தில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை விஜிலா பாலஞானசெல்வம், ஆசிரியர்கள் பாலசிங், சுப்பையா, செந்தில், சி.பி.சி.ஐ.டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.