கோபி பகுதியில்விதை பண்ணை வயல்களில் வேளாண்மை அதிகாரி ஆய்வு
கோபி பகுதியில் விதை பண்ணை வயல்களில் வேளாண்மை அதிகாரி ஆய்வு நடத்தினாா்
கோபி பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் ஆய்வு செய்தார். நாகதேவம்பாளையம், சிறுவலூர் மற்றும் வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களில் அமைக்கப்பட்ட உளுந்து மற்றும் நிலக்கடலை விதை பண்ணை வயல்களில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் சிறுவலூர் பகுதிகளில் பாரத பிரதமரின் தண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நுண்ணீர் பாசனம் மற்றும் பண்ணை நீர் தேக்க தொட்டி போன்றவற்றையும் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தூ.தே.முரளி, வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் உட்பட வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.