ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை-15-ந் தேதி வழங்கப்படுகிறது

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை 15-ந் தேதி வழங்கப்படுகிறது.;

Update: 2023-09-10 21:20 GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தை வருகிற 15-ந் தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் 3 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெண்கள் கொடுத்து உள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, தகுதியான நபர்கள் குறித்து அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரோட்டில் வருகிற 15-ந் தேதி நடைபெறும் விழாவில் முதல்கட்டமாக 2 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டன. பிறகு பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்பட்டு பெண்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களின் உண்மை தன்மை தொடர்பாக அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர். தகுதியான நபர்களில் முதல்கட்டமாக வருகிற 15-ந் தேதி 2 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தொடர்ந்து தகுதியானவர்களின் வங்கி கணக்குகளுக்கு உரிமைத்தொகை செலுத்தப்படும்", என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்