மின்வாரிய அலுவலகத்தில்திருட்டு: வாலிபர் கைது
சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தில் காப்பர் ஒயர்களை திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தட்டார்மடம்:
சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் திருட்டு போனது. இதுகுறித்து குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் ஒயர்களை திருடிய தூத்துக்குடி முத்தையாபுரம் மேலத்தெரு சுந்தர்ராஜ் மகன் செல்வகுமார் (வயது 30) என்பவரை நேற்று கைது செய்தனர்.