வரதட்சணை புகார்களில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை எப்.ஐ.ஆரில் சேர்க்கக் கூடாது - தமிழக தலைமை குற்றவியல் வக்கீல்

வரதட்சணை புகார்களில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை எப்.ஐ.ஆரில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக தலைமை குற்றவியல் வக்கீல் கூறியுள்ளார்.

Update: 2023-08-05 15:44 GMT

சென்னை,

வரதட்சணை கொடுமை புகாரின்மீது வழக்குப் பதிவு செய்யும் போது, கணவரின் குடும்பத்தினர் பெயர்களை எப்.ஐ.ஆரில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வரதட்சணை கொடுமை புகாரில், கணவர் பெயரை மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகே, குடும்பத்தினருக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் என்பதால், கணவர் பெயருடன் மற்றும் பலர் என குறிப்பிடுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல் தகவல் அறிக்கைகளில் குடும்பத்தினர் பெயர்கள் சேர்க்கப்படுவதால், அது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அவர்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்