திண்டுக்கல்லில்மினி மாரத்தான் போட்டி

திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.;

Update:2023-02-13 00:15 IST

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுபோக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சி.ஐ.டி.யூ. மற்றும் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

ஆண்களுக்கு 7 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ. தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் போட்டிப்போட்டு கொண்டு ஓடினர். இதில் பெண்களுக்கான பிரிவில் திண்டுக்கல் புனித லூர்தன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோன் ஷாலினி, வலையப்பட்டி பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி பள்ளி மாணவி நீஹா, திண்டுக்கல் புனித லூர்தன்னை பள்ளி மாணவி மெல்வினா ஆகியோர் தலா முதல் 3 இடங்களை பிடித்தனர். ஆண்களுக்கான பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி மாணவர் பொண்ணுவெள்ளை முதலிடமும், ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு பள்ளி மாணவர் அஜய் தர்மா 2-வது இடமும், நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளி மாணவர் கபிலன் 3-வது இடமும் பிடித்தனர்.

முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2-வது இடம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் விழாவிற்கு சி.ஐ.டி.யூ. சங்க மண்டல தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமநாதன் வரவேற்றார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பரிசு வழங்கினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, மாவட்ட தடகள சங்க தலைவர் துரைரெத்தினம், பொருளாளர் துரைராஜ், செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யூ. மாநில உதவி தலைவர் சந்திரன், துணை பொதுச்செயலாளர் வெங்கிடுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்