திண்டுக்கல், வடமதுரை, தாடிக்கொம்புவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல், வடமதுரை, தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.;

Update: 2022-11-27 18:50 GMT

பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் வேடப்பட்டி அருகே உள்ள மரிய அந்தோணியார் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வின் மகன் ஆதவன் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் அமைப்பாளர் கதிரேசன், துணை அமைப்பாளர் ரூபன், வெங்கடேசன், ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி, துணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சுப்புலட்சுமி, மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ், சுரேஷ், புருஷோத்தமன் மற்றும் அடியனூத்து, வெள்ளோடு கிளை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேட்டி-சேலை

வடமதுரை நகர தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தி.மு.க. நகர செயலாளர் மெடிக்கல் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பையன், வடமதுரை பேரூராட்சி தலைவர் நிருபாராணி முன்னிலை வகித்தனர். இதில், வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வடமதுரை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 45 பேருக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கினார். இந்த விழாவில் பேரூர் துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சவுந்தர்ராஜ், மகேஷ், தேன்மொழி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தாடிக்கொம்பு

இதேபோல் தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வெள்ளிதேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், பேரூர் செயலாளர் ராமலிங்கசுவாமி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், அவைத்தலைவர் சுப்பிரமணி, பேரூர் பொருளாளர் கண்ணன், துணை செயலாளர் இன்னாசி, மாவட்ட பிரதிநிதி அருள், தாடிக்கொம்பு பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்