கடலூரில்இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-01-02 18:45 GMT

தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் உத்தரவுபடி விடுபட்ட அனைவருக்கும் சாதிச்சான்று, வீட்டு மனைப்பட்டா, நலவாரிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சாதிச்சான்றுக்கு இணைய வழி அல்லது நேரடியாக மனுக்கள் பெறும் முறையை நடைமுறைபடுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பாபு தலைமை தாங்கினார். முகாம் செயலாளர் சசிகுமார் வரவேற்றார். முகாம் தலைவர் ரத்தினாம்பாள், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் அஜீத், காராமணிக்குப்பம் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தொடங்கி வைத்தார்.

இதில் த.வா.க. அருள்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத், தி.க.தண்டபாணி, அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ரவி, மனித நேய ஜனநாயக கட்சி மன்சூர், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பால்கி, இஸ்லாமிய கூட்டமைப்பு அஸ்மா நசூருதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் குரு.ராமலிங்கம், மீனவர் பேரவை சுப்புராயன், திருநாவுக்கரசு உள்பட பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி விக்னேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்