சென்னிமலையில் தனியார் பஸ்களிடையே நேரம் குறித்த தகராறு

சென்னிமலையில் தனியார் பஸ்களிடையே நேரம் குறித்த தகராறு ஏற்பட்டது.

Update: 2022-08-27 21:25 GMT

சென்னிமலை

ஈரோட்டில் இருந்து தினமும் சென்னிமலை வழியாக 2 தனியார் பஸ்கள் பழனிக்கு சென்று வருகிறது. இதில் ஒரு தனியார் பஸ் பழனியில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்னிமலை பஸ் நிலையத்துக்கு 8.50-க்கு வரவேண்டும். அதேபோல் மற்றொரு பஸ் பழனியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னிமலை பஸ் நிலையத்திற்கு 8.55 மணிக்கு வர வேண்டும். ஆனால் நேற்று காலை அந்த பஸ் 8.48 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் வந்து சேர்ந்தது.அதன்பிறகு வந்த மற்றொரு பஸ் முன்கூட்டி வந்த பஸ் முன்பு குறுக்கே நிறுத்தி எப்படி வரவேண்டிய நேரத்துக்கு முன்பே வரலாம் என டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்தனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து மற்ற பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னிமலை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்