சென்னிமலை, சோலார் பகுதியில் பலத்த மழை
சென்னிமலை, சோலார் பகுதியில் பலத்த மழை பெய்தது.
சென்னிமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 40 நிமிடம் நீடித்தது. இந்த மழை காரணமாக சென்னிமலை பகுதியில் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் சோலார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 20 நிமிடம் நீடித்தது. பின்னர் சாரல் மழை பெய்தது.