சாமனூர் கிராமத்தில்நிலத்தகராறில் விவசாயி மீது தாக்குதல்

Update: 2023-09-06 18:45 GMT

மாரண்டஅள்ளி

மாரண்டஅள்ளியை அடுத்த சாமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் (வயது 42), இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே முனிராஜ் அனுபவத்தில் உள்ள நிலத்தில் இறந்தவரது உடலை புதைக்க ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது. இதனை முனிராஜ் தட்டிக் கேட்டதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் முனிராஜ் தாக்கப்பட்டார். காயம் அடைந்த அவர் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார், வெங்கடேசன் (48), வடிவேல் (47), அருள் பிரகாஷ் (42), பரந்தாமன் (46), கோவிந்தராஜ் (48), அசோகன் (47), கிருஷ்ணமூர்த்தி (48) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வடிவேல், கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்