மேல்முறையீடு செய்தால் ஆய்வு செய்து உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை

இதுவரை கிடைக்காமல் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்தால் ஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.;

Update: 2023-09-15 20:15 GMT


இதுவரை கிடைக்காமல் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்தால் ஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.


மகளிர் உரிமைத்தொகை திட்டம்


கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழா மதுக்கரை தாலுகா தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பி.ஆர்.நடராஜன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இந்த திட்டத்தின் கீழ் பெயன்பெறும் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கான ரூபே ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 6 லட்சம் பெண்கள் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உரிய தகுதிகள் இருந்தும், உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டிருந்தால், சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக பெண்கள் மேல்முறையீடு செய்து தெரிவிக்கலாம்.


இடைநிற்றல் குறைந்தது


அவர்கள் விரைந்து ஆய்வு செய்து உரிமைத்தொகை கிடைப்ப தற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். உயர்கல்வி பயில மாதந் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத் தால் பெண் குழந்தைகளின் பள்ளி படிப்பு இடைநிற்றல் குறைந்து உள்ளது. உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிக ரித்து உள்ளது.


மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுக ளுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள், தங்களுடைய வங்கி கணக்கு எண், கடவு சொல்லை யாரிடமும் தெரிவிக்க வேண் டாம். ஏதாவது சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர் களை அணுகி தேவையான ஆலோசனைகளை பெறலாம்.


இவ்வாறு அவர் பேசினார்.


இந்த மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


புகார் கூறவில்லை


இதையடுத்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-


இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பெண்களுக்காக இது போன்ற சிறப்பான திட்டங்கள் இல்லை. மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து காலை உணவு, புதுமைப் பெண், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதை பார்த்து மற்ற மாநிலங் களில் நாமும் இந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்று முயற்சி எடுக்கிறார்கள்.


கோவை மாநகராட்சி மேயர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் என்னிடம் அவர் குறித்து புகார் கூறவில்லை. மேயர் மீதான புகார்கள் குறித்து விசாரித்து விட்டு சொல்கிறேன். நிதித்துறை கடுமையான சூழலில் இருந்தாலும் இதுபோன்ற மக்கள் நலன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்