கூடுதலாக லாரிகளில் மணல் ஏற்றி செல்வதைதடுக்கக்கோ ரி ஆர்ப்பாட்ட ம்

நிர்ணயித்த அளவை விட கூடுதலாக லாரிகளில் மணல் ஏற்றி செல்வதை தடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பா ட்டம் நடந்தது.;

Update: 2023-03-14 18:42 GMT

கொள்ளிடம், மார்ச்.15-

நிர்ணயித்த அளவை விட கூடுதலாக லாரிகளில் மணல் ஏற்றி செல்வதை தடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பா ட்டம் நடந்தது.

மணல்குவாரி

கொள்ளிடம் அருகே மாதிரவே ளூர், பாலூரன்படுகை ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது.கொள்ளிடம் ஆற்றில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் மணல் குன்னம் கிராமத்தில் சாலையோரம் உள்ள மணல் கிடங்கில் குவியல், குவியலாக கொட்டி வைக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் பல்வே று பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. லாரிகளில் மணலை மூடி கொண்டு செல்ல வேண்டும். மணலை ஏற்றி செல்ல ஒரு பாதையிலும், மணல் ஏற்றிய பிறகு லாரிகள் செல்வதற்கு வேறு பாதையிலும் செல்ல வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

மாதிரவேளூர் கிராமத்தில் இருந்து புத்தூர் வரை சாலையின் இரு பக்கமும் காடாகஉள்ள பகுதிகளை அகற்ற வேண்டும். அரசால் நிர்ணயிக்கபட்ட அளவை விட கூடுதலாக லாரிகளில் மணல் ஏற்றி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்கள் பள்ளி செல்லும் நேரங்களில் மணல் லாரிகள் இயங்குவதை நிறுத்த வே ண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி குன்னம் கிராமத்தில் உள்ள மணல் கிடங்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொள்ளிடம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், ஒன்றியக்குழு துணைதலைவர் பானு சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோ ர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் பேசினார்.

பேச்சுவார்த்தை

இதில் கொள்ளிடம் கிழக்கு வட்டார தலை வர் பாலசுப்பிரமணியன், சீர்காழி நகர தலைவர் லட்சுமணன், மாவட்ட மகளிர் அணி தலைவி சித்ரா செல்வி, நகர தலைவர் லட்சுமணன் மற்றும் மாவட்ட , ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை பொறியாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கை விட்டு அங்கிந்து கலைந்து சென்றனர் . ஆர்ப்பா ட்டத்தை முன்னிட்டு 50-க்கும் மே ற்பட்ட போலீசார் குவாரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்