மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியானார்.;

Update: 2022-09-02 12:23 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நாய் திடீரென குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

அரசு பஸ் டிரைவர்

கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சீனிவாசன் (வயது 46). இவர் அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பணிமனைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியுள்ளது. நாய் மீது மோதாமல் இருக்க முயற்சித்தபோது, நிலை தடுமாறிய சீனிவாசன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சாவு

ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சீனிவாசனுக்கு சுகுணா என்ற மனைவியும், நித்தியா (வயது 13), ஹேமா (வயது 10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்