தூத்துக்குடிமாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில்1,888 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
தூத்துக்குடிமாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 1,888 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்;
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 1,888 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் ெசய்யப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு
தேசிய தேர்வு முகமை மூலம் மருத்துவ படிப்புக்கு ஆண்டு தோறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,888 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர்.
1,888 பேர்
இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அழகர் பப்ளிக் பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும், தடையில்லா இணைய வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.