பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்களில் 193 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்களில் 193 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Update: 2023-02-12 18:30 GMT

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று முன்தினம் நடந்தது. அரியலூர் தாலுகாவிற்கு ராயம்புரம் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் வாழைக்குறிச்சியிலும், செந்துறை தாலுகாவில் பரணத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் ஆண்டிமடத்திலும் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தது. கூட்டத்தினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்தினார்கள். இதில் கூட்டுறவு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடத்தப்பட்டதை அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 197 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 193 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 4 மனுக்கள் சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்