கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை - தகவல் தர வாட்ஸ்அப் எண் அறிவிப்பு.

கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை - தகவல் தர வாட்ஸ்அப் எண் அறிவிப்பு.;

Update: 2023-05-27 10:54 GMT

சேவூர், மே.28-

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கடந்த 13-ந்தேதி இரவு கள்ளச்சாராயம் அருந்திய, 23 பேர் உயிரிழந்தனர். அதன்பின், மே.21 -ந்தேதி தஞ்சையில், 'டாஸ்மாக்' மதுக்கடை பாரில் விற்ற மது வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்தனர். இது போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால், போலீசார், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், அவினாசி சரக போலீஸ், மற்றும் மதுவிலக்கு பிரிவினர் இதற்கென பிரத்யேகமாக வாட்ஸ் ஆப் எண் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் 99620 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு, கள்ள சாராயம், போலி மது, சட்ட விரோத மது விற்பனை ஆகியன குறித்து தகவல் அளிக்கலாம் எனத்தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அறிவிப்பு பேனர், அவினாசி, சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.சேவூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத மது விற்பனை, சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயல் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அதனால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்கு பற்றியும் விவரித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதில் மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் சேவூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், பத்மாவதி, தனி பிரிவு தலைமைபோலீஸ் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

----------

Tags:    

மேலும் செய்திகள்