10-ம் வகுப்பு தேர்வில் இலஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

10-ம் வகுப்பு தேர்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2023-05-19 20:59 GMT

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தென்காசி அருகே உள்ள இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 51 மாணவ மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவி பவித்ரா 95.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்தார். அவர் பாடவாரியாக தமிழில் 96, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 99, அறிவியலில் 94, சமூக அறிவியலில் 91 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ராபியா சனா 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அவர் பாடவாரியாக தமிழில் 95, ஆங்கிலத்தில் 96, கணிதத்தில் 95, அறிவியலில் 98, சமூக அறிவியலில் 91 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அக்க்ஷயா 94.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். அவர் பாடவாரியாக தமிழில் 84, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 99, அறிவியலில் 95, சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் பாட வாரியாக ஒருவர் தமிழில் 96 மதிப்பெண்களும், ஒருவர் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 3 பேர் 99 மதிப்பெண்களும், ஒருவர் அறிவியலில் 98 மதிப்பெண்களும், ஒருவர் சமூக அறிவியலில் 96 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாரத் கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் இயக்குனர் ராதா பிரியா, ஆலோசகர் உஷா ரமேஷ், பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்