இளையராஜா பிறந்தநாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2023-06-02 04:45 GMT

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாள் விழா இன்று இளையராஜாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மூத்த அமைச்சர்கள், கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்