சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-04-17 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பஸ் நிலையம் எதிரே உள்ள பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார். முன்னதாக ஜமாத் தலைவர் ராஜா முகமது வரவேற்றார். அதனை தொடர்ந்து தொழுகை நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் பேசுகையில், இது போன்ற சமூக நல்லிணக்க விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. என்றும் ஒரு அரணாக இருக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. மாவட்ட அவை தலைவர் கணேசன், நகர அவை தலைவர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர தலைவர் கதிர்வேல், துணை ஒன்றிய செயலாளர்கள் சிவபுரிசேகர், முத்துக்குமார், நகர துணைதலைவர் அலாவுதீன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், பிரதிநிதி குடோன்மணி, புகழேந்தி, மருத்துவர் அருள்மணி நாகராஜன், முறையூர் ஊராட்சி தலைவர் சுரேஷ், தொழிலதிபர்கள் சரவணன், கணேசன், பாரிவள்ளல் பள்ளி முதல்வர் ஷியாம் பிராங்கிளின் டேவிட், காங்கிரஸ் இலக்கிய அணி சிங்கை தருமன், எஸ்.எஸ்.ஏ. கல்லூரி தலைவர் சந்திரசேகர், செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சொசைட்டி பொறுப்பாளர் வையாபுரி செந்தில், பேரூராட்சி உறுப்பினர்கள், பாதிரியார்கள், சிவாச்சாரியார்கள் என அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்