தரமான விதை இல்லையென்றால் மகசூல் பாதிக்கும்

தரமான விதைகள் இல்லையென்றால் ஏனைய இடுபொருட்கள் சரியான அளவில் இட்டாலும் மகசூல் பாதிக்கப்படும் என விதை சான்று இணை இயக்குனர் செல்வின் இன்பராஜ் கூறினார்.

Update: 2023-05-07 19:00 GMT


தரமான விதைகள் இல்லையென்றால் ஏனைய இடுபொருட்கள் சரியான அளவில் இட்டாலும் மகசூல் பாதிக்கப்படும் என விதை சான்று இணை இயக்குனர் செல்வின் இன்பராஜ் கூறினார்.

விதை பண்ணையில் ஆய்வு

சென்னை விதைசான்று இணை இயக்குனர் செல்வின் இன்பராஜ் விருதுநகர் மாவட்டத்தில் விதை பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டார். சாத்தூர் அருகே மயூரநாதபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கொத்தவரை விதைப்பண்ணையை ஆய்வு செய்தார். அப்போது அந்த பண்ணையில் விதை ஆதாரம் சரிபார்த்தல், பயிர்எண்ணிக்கை பராமரிப்பு, கலவன் பயிர்களை நீக்குதல், விதை பண்ணை, விதைச்சான்று நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விதை சுத்தி நிலையத்தையும் சாத்தூர் அருகே உள்ள என். மேட்டுப்பட்டியில் உள்ள தனியார் விதைசுத்தி நிலையத்தையும் ஆய்வு செய்தார்.

மகசூல் பாதிப்பு

இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

விதை உயிருள்ள இடுபொருள.் நல்ல விளைச்சலுக்கும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் அடிப்படை தரமான நல்விதையாகும். தரமான விதை இல்லை என்றால் ஏனைய இடுபொருட்களை சரியான அளவில் இட்டாலும் மகசூல் பாதிக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க விதை சான்று நடைமுறைகளின் படி விதைப்பண்ணையை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது விதைச்சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ், துணை இயக்குனர் வனஜா மற்றும் விதைச் சான்று அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்