பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்ந்தால், தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக நேரிடும் - அண்ணாமலை எச்சரிக்கை
பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வன்முறையை பாஜக விரும்பவில்லை. என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.;
சென்னை,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்ந்து நீடித்தால், தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக நேரிடும். கோவையில் நாளை பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும். சட்டம்-ஒழுங்கு சீர்குலைய கோவை மாநகர காவல்துறையே காரணம். காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன்.
பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வன்முறையை பாஜக விரும்பவில்லை. முதல்-அமைச்சர் விழித்துக்கொள்ள வேண்டும். பாஜக-திமுக இடையே நடைபெறும் போரில் காவல்துறை வரக்கூடாது.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய பாஜக எம்.எல்.ஏக்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன் சரஸ்வதி தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.