செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சிக்கு ஆபத்து - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சிக்கு ஆபத்து என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சி,
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சிக்கு ஆபத்து. .செந்தில் பாலாஜியை பார்த்துக்கொள்வது ஆட்சியை காப்பாற்ற தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சி துவாக்குடியில் எம்ஜிஆர் உருவச் சிலையை திறந்துவைத்த பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி இது குறித்து கூறியதாவது ,
திமுக ஆட்சியில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. அதிமுகவிற்கு எதிராக பி டீம்-ஐ உருவாக்கியவர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின். செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சிக்கு ஆபத்து .செந்தில் பாலாஜியை பார்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்காக அல்ல; ஆட்சியை காப்பாற்ற தான்.