பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து மீண்டும் சேர்ப்பு
பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து மீண்டும் சேர்க்கப்பட்டனர்.;
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உத்தரவின் பேரில் கரூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட நீலிமேடு குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்தியவதி, வட்டார கல்வி அலுவலர்கள் அழகேசன், மணிமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி செல்லா மாணவர்கள் தர்மலிங்கம், கீதாலட்சுமி ஆகியோரை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.