இரு படைகளுக்கு இடையே உறவை மேம்படுத்த இந்திய கடலோர காவல்படை-அசாம் ரைபிள்ஸ் உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்
இரு படைகளுக்கு இடையே உறவை மேம்படுத்த இந்திய கடலோர காவல்படை அசாம் ரைபிள்ஸ் உயர் அதிகாரிகள் கலந்துரையாடினர்.;
இந்திய துணை ராணுவப்படைகளில் மிகவும் பழமையான அசாம் ரைபிள்ஸ், இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் கூட்டு பணிக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இரு படைகளுக்கும் இடையே புரிந்துணர்வையும், உறவையும் மேம்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அசாம் ரைபிள்ஸ் சார்பில் கூட்டு பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட வீரசக்ரா விருது பெற்ற கர்னல் ஜெனரல் சச்சின் நிம்பல்கர், இந்திய கடலோர காவல்படையின் சார்பில் கூட்டு பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பணியாளர் பிரிவு இயக்குனரான டி.ஐ.ஜி. ஆர்.கே.சின்கா ஆகியோர் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
மேலும், இரு படைகளின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். அசாம் ரைபிள்ஸ் இயங்கும் விதம், கடலோர காவல்படை கப்பல்களின் திறன்கள், நவீன தொழில்நுட்பம் குறித்து கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துரையாடினர்.