ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-11 17:10 GMT

சென்னை,

தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக லட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட கலெக்டராக தங்கவேல் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆணையராக சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஆணையராக வீரராகவராவ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டராக இருந்த ஜான் வர்கீஸ் ஐ.ஏ.எஸ்., சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி கலெக்டராக இருந்த செந்தில்ராஜ் ஐ.ஏ.எஸ்., சிப்காட் மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக ஸ்ருதன்சய் நாராயணன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகராக ரத்தினசாமி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்