தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மதுரை, சேலம் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.;
சென்னை,
போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்தரரெட்டி, இயற்கை வளம் என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துறையின் கூடுதல் தலைமை செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு போக்குவரத்து துறை கமிஷனராக அவர் நியமிக்கப்படுகிறார்.
போக்குவரத்து துறை கமிஷனராக இருந்த நிர்மல்ராஜ், புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக மாற்றப்படுகிறார்.
சமூகநலத்துறை இயக்குனர்
புவியியல் மற்றும் கனிமவளத்துறை கமிஷனராக இருந்த ஜெயகாந்தன், சமூகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை கமிஷனராக பொறுப்பேற்பார்.
சமூகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை இயக்குனர் ரத்னா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
மதுரை-சேலம் மாநகராட்சி கமிஷனர்
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மதுரை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்கிறார்.
மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த சிம்ரன்ஜித்சிங் கலோன், பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கூடுதல் கலெக்டர் பாலசந்தர், சேலம் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.