ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன் என்று த.மா.கா. தலைவர் ஜி.ேக.வாசன் கூறினார்.;

Update: 2023-09-24 17:19 GMT

ஆரணி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன் என்று த.மா.கா. தலைவர் ஜி.ேக.வாசன் கூறினார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி தான் பிரதமர் ஆவார். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, தமிழகத்திற்கு அடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். இதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வந்தவுடன் அ.தி.மு.க. கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

பா.ஜ.க.வை பொறுத்தவரை யாரை சந்திக்க வேண்டுமோ அவர்களை நட்டா சந்தித்து விட்டார். என்ன பேச வேண்டுமோ அதை பேசிவிட்டார். என்ன பேசினார்கள் என்று யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைய இது வழிவகுக்கும்.

தி.மு.க. 2 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனை மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். வாக்கு சீட்டின் மூலம் பதில் கூற தயாராகி விட்டார்கள்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு தான் ஆதரவு, எந்த மாநில தலைவர்களாக இருந்தாலும் சரி பொதுவாக இறந்தவர்கள் குறித்து விமர்சனங்கள் செய்வது சரியானது அல்ல.

அ.தி.மு.க., த.மா.கா உள்ளிட்ட ஒத்த கருத்துள்ள கட்சிகள் உள்ள கூட்டணியில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை வரவேற்கிறேன், அதற்கான குழுவை முன்னாள் ஜனாதிபதி தலைமையில் அமைத்து ஆய்வு நடந்து வருகிறது. இதனால் செலவுகள் பெரும்பான்மையாக குறையும்.

அதற்கான தாக்கம்  விரைவில் மக்களுக்கு புரியும்., நாட்டின்  வளர்ச்சி தேவை. அதற்கு பொருளாதாரம் தேவை. இதனால் அடிக்கடி தேர்தல் தேவையில்லாதது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்