பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன் - பிரதமர் மோடி பதிவு

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2024-02-28 03:51 GMT

தூத்துக்குடி,

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவில் மதுரையில் தங்கினார். இன்று காலை பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்படுகிறார். காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து காரில் சென்று அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, விழா மேடையும் தயார் நிலையில் உள்ளது. பின்னர் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில், பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றதாக, எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை பகிர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்