ஆரல்வாய்மொழி அருகே வடமாநில பெண் அடித்து கொலை:நான் குடிக்க வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவிைய கொன்றேன்கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

நான் குடிக்க வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவியை அடித்து கொன்றேன் என கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் ெகாடுத்தார்.

Update: 2023-05-02 18:24 GMT

ஆரல்வாய்மொழி:

நான் குடிக்க வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவியை அடித்து கொன்றேன் என கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் ெகாடுத்தார்.

செங்கல் சூளை தொழிலாளி

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் சமத்துவப்புரத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது44). இவரது செங்கல்சூளையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அதில் மேற்கு வங்காளம் பேல்பூர் அருகே போல்டா நாடியா பகுதியைச் சேர்ந்த தொழிலாளி டெபு ராய் (30) என்பவர் வசந்தி பகாடியா (29) என்ற பெண்ணுடன் தங்கியிருந்தார். இவர்களுடன் வசந்தி பகாடியாவின் 7 வயது மகனும் தங்கியிருந்தான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வசந்தி பகாடியா கொலை ெசய்யப்பட்டார். இதுதொடர்பாக டெபுராயை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் டெபுராய் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

பெண்ணுடன் தொடர்பு

எனது முதல் மனைவியும் குழந்தைகளும் கொல்கத்தாவில் உள்ளனர். இந்தநிலையில் செண்பகராமன்புதூர் பகுதியில் நான் வேலை பார்த்த செங்கல் சூளையில் எங்கள் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை செய்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் அவரது கணவருக்கு தெரிய வந்ததும் அவர் மனைவியை அழைத்துக் கொண்டு நாங்குநேரி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார்.

இதையடுத்து நான் அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்து வந்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்தோம். இதற்கிடையே மனைவியை காணவில்லை என்று அவரது கணவர் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பெண்ணை என்னிடம் இருந்து பிரித்து கணவனோடு சேர்த்து வைத்தனர்.

தகராறு செய்தார்

இதன்பின்பு நான் எனது சொந்த ஊரான மேற்கு வங்காளத்துக்கு சென்ற போது அங்கிருந்து வசந்தி பகாடியாவை அழைத்து வந்து 3-வது திருமணம் செய்தேன். ஆனாலும் 2-வது நான் திருமணம் செய்த பெண் என்னிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இந்த விவரம் வசந்தி பகாடியாவுக்கு தெரிய வரவே எங்களுக்கு அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று நாங்கள் மது போதையில் இருந்த போது இந்த விவகாரம் ெதாடர்பாக என்னிடம் தகராறு செய்தார். அது மட்டுமின்றி நான் வாங்கி வைத்திருந்த மதுவையும் அவள் எடுத்து குடித்து விட்டாள். இதனால் ஆத்திரமடைந்த நான் அவளை அடித்து கொன்றேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து டெபுராயை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். அவருடன் தங்கியிருந்த 7 வயது சிறுவனை வசந்தி பகாடியாவின் தம்பியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்