"கள்ளக்காதலை மனைவியிடம் கூறுவதாக மிரட்டியால் கொன்றேன்"

கள்ளக்காதல் விவகாரத்தை மனைவியிடம் கூறி விடுவதாக மிரட்டியதால் பெண்ணை கழுத்தைநெரித்து கொலை செய்தேன் என்று கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

Update: 2023-08-05 18:45 GMT

கோவை


கள்ளக்காதல் விவகாரத்தை மனைவியிடம் கூறி விடுவதாக மிரட்டியதால் பெண்ணை கழுத்தைநெரித்து கொலை செய்தேன் என்று கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.


பெண் கொலை


கோவை பீளமேடு சேரன்மாநகர், பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (வயது 40). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டின் படுக்கை அறையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்து இருந்த 5¾ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.


எனவே நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.


கொலையாளி கைது


இதில் வீட்டிற்குள் சென்று ஜெகதீஸ்வரியை கொலை செய்தவர், கோவை ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது33) என்பதும், அவர், ரேஸ்கோர்சில் சூப் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.


உடனே அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஜெகதீஸ்வரிக்கும், மோகன்ராஜூக்கும் கள்ளக்காதல் இருந்ததும், அந்த தகராறில் கொலை செய்ததையும் மோகன்ராஜ் ஒப்புக் கொண்டார்.


கள்ளக்காதல்


போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-


எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. நான் கோவை ராமநாதபுரத்தில் தங்கி ரேஸ்கோர்சில் சூப் கடை நடத்தி வருகிறேன். குத்துச்சண்டை பயிற்சியும் பெற்றுள்ளேன்.


கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேரன்மாநகரில் வசித்த போது அருகில் வசித்த ஜெகதீஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.


ஜாலியாக இருந்தோம்


அவரது மகள் பள்ளிக்கும், கணவரும் வேலைக்கும் சென்று விடுவார்கள். அதன் பிறகு நான், ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு சென்று தனிமையில் ஜாலியாக இருப்போம். மேலும் செல்போனி லும் அடிக்கடி பேசி வந்தேன். இதனால் எனது மனைவிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அது பற்றி கேட்கும் போது எல்லாம் நான் மழுப்பலாக பதில் அளித்து வந்தேன்.


இதனால் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் நான் சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் பகுதிக்கு குடிபெயர்ந்தேன். ஆனால் அதன்பிறகும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. நான் அடிக்கடி அங்கு சென்று ஜாலியாக இருந்து வந்தேன்.


வேறு நபர்களுடன் பழக்கம்


இதற்கிடையே ஜெகதீஸ்வரிக்கு வேறு ஆண்களுடனும் நட்பு ஏற்பட்டு நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதை நான் கண்டித் தேன். ஆனாலும் அவர் கேட்காமல் தொடர்ந்து மற்ற ஆண்களு டன் பழகி வந்தார்.


இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அதோடு அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு வந்தார். ஆனால் என்னால் தொடர்ந்து பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர் நான் பணம் தராவிட்டால் உனது மனைவியிடம் கள்ளக்காதலை கூறி விடுவேன் என்று மிரட்டினார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.


கொலை செய்தேன்


சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரிக்கு போன் செய்து வீட்டிற்கு வர வா என கேட்டேன். அவரும் வா என்று அழைத்தார். உடனே நான் அவரது வீட்டிற்கு காலை 11 மணிக்கு சென்றேன். அங்கு அவரிடம் பேசி கொண்டு இருந்த போது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.


ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்துடன் சென்றதால் நான் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றேன். வாக்குவாதம் முற்றிய நிலையில் நான், ஜெகதீஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.


சகஜமாக இருந்தேன்


பின்னர் மதியம் 1 மணியளவில் அங்கிருந்து எனது வீட்டிற்கு சென்று விட்டேன். ஆனாலும் கொலை நடந்ததை வெளியில் காட்டி கொள்ளாமல் எப்போதும் போல சகஜமாக எனது வேலைகளை செய்து வந்தேன். இதனால் என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.


மேலும் வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் ஜெகதீஸ்வரியின் வீட்டில் இருந்த நகையை எடுத்து சென்றேன். போலீசார் என்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக 2 வாகனங்களிலும், நம்பர் பிளேட்டை மாற்றியும் பயணித்தேன். ஆனால் போலீசார் கண் காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நான் அணிந்திருந்த சட்டையை வைத்து என்னை கைது செய்து விட்டனர்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதைத்தொடர்ந்து போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.


முதல் கொலையில் தப்பினார்


இந்த கொலையில் துப்பு துலக்கிய தனிப்படை போலீஸ் அதி காரிகள் கூறுகையில், கைதான மோகன்ராஜ், ஏற்கனவே சேலத் தில் நடந்த ஒரு கொலையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட் டார். அந்த கொலை வழக்கில் போதிய சாட்சியம் இல்லை என்று அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார். எனவே இந்த கொலையி லும் தடயங்களை மறைத்து பெண்ணை கொலை செய்ததில் இருந்து தப்பி விடலாம் என்று கருதி செயல்பட்டு உள்ளார். ஆனால் போலீசார் சிறப்பாக துப்புதுலக்கி மோகன்ராஜை கைது செய்துள்ளனர் என்றனர்.


மேலும் செய்திகள்