தென் மாவட்டங்களில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் - ரவீந்திரநாத்

தென் மாவட்டங்களில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என தேனி எம்.பி. ரவீந்திரநாத் தெரிவித்தார்.;

Update:2024-02-29 15:45 IST

மதுரை,

மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் கூறுகையில் ,

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட வாய்ப்பில்லை. தென் மாவட்டங்களில் எந்த மக்களவைத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தருவதற்கான வாய்ப்பு இருப்பதால் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எட்டப்படும். மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்;

ஓரிரு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. உடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்